வாழ்க்கையில் சில அனுபவங்கள் நம்மை ஆழமாகப் பாதிக்கலாம். விபத்து, இயற்கை அனர்த்தம், வன்முறை, துஷ்பிரயோகம், கொடுமைப்படுத்துதல், அன்புக்குரிய ஒருவரின் இழப்பு, போர், இடம்பெயர்வு அல்லது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பயமுறுத்தும் சம்பவங்கள் போன்றவை ஒருவரின் மனதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சிலருக்கு ஒரு கடினமான நிகழ்வு முடிந்த பிறகு காலப்போக்கில் மனநிலை சீராகிவிடலாம். ஆனால் சிலருக்கு அந்த நிகழ்வின் நினைவுகள் தொடர்ந்து தொந்தரவு செய்யலாம். மீண்டும் மீண்டும் அந்த சம்பவம் நினைவுக்கு வருதல், பயம், பதற்றம், கனவுகள், கோபம், சோகம், குற்ற உணர்வு, பிறரை நம்புவதில் சிரமம் அல்லது அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் இடங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.
இத்தகைய சூழலில் Trauma-Focused Therapy (Trauma மையப்படுத்திய சிகிச்சை) முக்கியமான உளவியல் சிகிச்சை அணுகுமுறையாக இருக்கலாம்.
Trauma-Focused Therapy என்பது traumatic experience-ஐ மட்டும் மீண்டும் நினைவுபடுத்துவது அல்ல. அந்த அனுபவம் ஒருவரின் எண்ணங்கள், உணர்வுகள், உடல் உணர்வுகள், நடத்தை மற்றும் உறவுகள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பான முறையில் அதைச் செயலாக்கவும், தற்போதைய வாழ்க்கையை மீண்டும் முன்னெடுக்கவும் உதவும் சிகிச்சை அணுகுமுறைகளின் தொகுப்பாகும்.
Trauma என்றால் என்ன?
Trauma (மன அதிர்ச்சி / உளவியல் அதிர்ச்சி) என்பது ஒருவர் மிகவும் பயமுறுத்தும், ஆபத்தான, வன்முறையான அல்லது ஆழமாக மனதை பாதிக்கும் ஒரு நிகழ்வை அனுபவிக்கும் போது அல்லது அதற்கு சாட்சியாக இருக்கும் போது ஏற்படக்கூடிய உளவியல் தாக்கத்தைக் குறிக்கிறது.
ஒரே நிகழ்வு வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஒரு விபத்தை இருவர் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு சில நாட்களில் அந்த அனுபவம் குறைந்து போகலாம். மற்றொருவருக்கு பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகும் அந்த சம்பவத்தின் நினைவுகள், பயம் அல்லது பதற்றம் தொடரலாம்.
எனவே, ஒரு நிகழ்வு traumatic-ஆக இருந்ததா என்பதை அந்த நிகழ்வின் தன்மையால் மட்டும் தீர்மானிக்க முடியாது; அந்த அனுபவம் அந்த நபரை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் முக்கியம்.
எந்த அனுபவங்கள் Trauma-வை ஏற்படுத்தக்கூடும்?
Trauma ஏற்படக்கூடிய அனுபவங்கள் பலவாக இருக்கலாம்.
1. விபத்துகள் (வாகன விபத்து, தீ விபத்து, கட்டிட விபத்து போன்ற அனுபவங்கள் ஒருவருக்கு ஆழமான பயத்தை ஏற்படுத்தலாம்.)
2. வன்முறை (உடல் வன்முறை, குடும்ப வன்முறை அல்லது சமூக வன்முறை போன்ற அனுபவங்கள் பாதுகாப்பு உணர்வை பாதிக்கலாம்.)
3. குழந்தைத் துஷ்பிரயோகம் (குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உடல், உணர்ச்சி அல்லது பாலியல் துஷ்பிரயோகம் நீண்டகால உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.)
4. Bullying (பள்ளியில் தொடர்ந்து கேலி செய்தல், அவமானப்படுத்துதல், மிரட்டுதல் அல்லது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல் போன்ற அனுபவங்களும் குழந்தையின் மனநிலையை பாதிக்கலாம்.)
5. இயற்கை அனர்த்தங்கள் (வெள்ளம், மண்சரிவு, புயல், நிலநடுக்கம் அல்லது பிற பேரிடர்களை அனுபவிப்பது அல்லது அவற்றால் வீடு மற்றும் உறவுகளை இழப்பது மன அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.)
6. அன்புக்குரியவரின் இழப்பு (ஒருவரை இழப்பது இயல்பான துயரத்தை ஏற்படுத்தும். சில சூழ்நிலைகளில், குறிப்பாக மரணம் மிகவும் திடீரென அல்லது அதிர்ச்சிகரமாக ஏற்பட்டிருந்தால், அந்த அனுபவம் கூடுதல் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.)
7. போர் மற்றும் இடம்பெயர்வு ( போர், வன்முறை, பாதுகாப்பின்மை மற்றும் கட்டாய இடம்பெயர்வு போன்ற அனுபவங்கள் நீண்டகால மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.)
Trauma-வின் பொதுவான அறிகுறிகள்
Trauma-வுக்குப் பிறகு ஒவ்வொருவரிடமும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது.
நினைவுகளுடன் தொடர்புடைய மாற்றங்கள்
- சம்பவம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருதல்
- விரும்பாமல் அந்த சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுதல்
- பயமுறுத்தும் கனவுகள்
- சம்பவம் மீண்டும் நடப்பது போன்ற உணர்வு
- சம்பவத்தை நினைவுபடுத்தும் விஷயங்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படுதல்
உணர்ச்சி மாற்றங்கள்
- அதிகமான பயம்
- பதற்றம்
- சோகம்
- கோபம்
- குற்ற உணர்வு
- அவமான உணர்வு
- உதவியற்ற நிலை
- உணர்ச்சியற்ற அல்லது வெறுமையான உணர்வு
நடத்தை மாற்றங்கள்
- சிலர் Trauma-வை நினைவுபடுத்தும் இடங்கள், நபர்கள் அல்லது சூழ்நிலைகளைத் தவிர்க்கத் தொடங்கலாம். உதாரணமாக, விபத்துக்குப் பிறகு ஒருவர் வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம்.
உடல் சார்ந்த மாற்றங்கள்
- தூக்கத்தில் சிரமம்
- திடுக்கிடுதல்
- இதயத் துடிப்பு அதிகரித்தல்
- உடல் பதற்றம்
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- எளிதில் எரிச்சல் அடைதல்
இந்த அறிகுறிகள் ஒருவரின் அன்றாட வாழ்க்கை, கல்வி, வேலை அல்லது உறவுகளை பாதிக்கத் தொடங்கினால் தொழில்முறை உதவியை நாடுவது முக்கியமாக இருக்கலாம்.
Trauma-Focused Therapy என்றால் என்ன?
Trauma-Focused Therapy என்பது Trauma அனுபவத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் உளவியல் சிகிச்சை அணுகுமுறையாகும்.
இதன் நோக்கம் ஒருவர் கடந்த காலத்தை மறந்துவிடச் செய்வது அல்ல. மாறாக, “என்ன நடந்தது?” → “அது என்னை எவ்வாறு பாதித்தது?” → “இப்போது நான் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்?” என்ற பாதையில் நபருக்கு உதவுவதே முக்கிய நோக்கமாகும்.
சிகிச்சையின் போது நபரின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை முக்கியமாகக் கருதப்படும். Trauma பற்றிய விவரங்களை உடனடியாக அல்லது கட்டாயப்படுத்தி பகிரச் செய்வது நோக்கம் அல்ல.
Trauma-Focused Therapy எவ்வாறு செயல்படுகிறது?
சிகிச்சையின் சரியான நடைமுறை நபரின் வயது, அனுபவம், அறிகுறிகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக பின்வரும் பகுதிகள் இடம்பெறலாம்.
1. Safety – பாதுகாப்பை உருவாக்குதல்
- முதலில் நபர் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உணரக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். Therapist மற்றும் client இடையே நம்பிக்கையான உறவு உருவாகுவது முக்கியம். குழந்தைகளிடம் பெற்றோர் அல்லது பாதுகாப்பான பராமரிப்பாளர் ஆதரவும் முக்கியமானதாக இருக்கலாம்.
2. Psychoeducation – உளவியல் புரிதலை வழங்குதல்
- trauma-க்குப் பிறகு ஏற்படும் பயம், திடுக்கிடுதல், பதற்றம் மற்றும் trauma நினைவுகள் மீண்டும் வருதல் போன்ற அனுபவங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை நபர் புரிந்துகொள்ள உதவுவதாகும். இதன் மூலம் “எனக்கு ஏன் இப்படி உணர்கிறது?” என்ற கேள்விகளுக்கான புரிதலைப் பெற முடியும்.
3. Coping Skills – சமாளிக்கும் திறன்களை வளர்த்தல்
- trauma தொடர்பான கடினமான உணர்வுகளை கையாள சில நடைமுறைத் திறன்கள் கற்றுக்கொடுக்கப்படலாம். மூச்சுப் பயிற்சி, Grounding techniques, Relaxation, உணர்வுகளை அடையாளம் காணுதல் மற்றும் சுய கட்டுப்பாடு போன்ற திறன்கள் பதற்றமான நேரங்களில் உணர்வுகளை பாதுகாப்பாக நிர்வகிக்க உதவலாம்.
4. Trauma Processing – Trauma அனுபவத்தை செயலாக்குதல்
- சில Trauma-Focused Therapies-ல், நபர் தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்போது traumatic experience தொடர்பான நினைவுகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை படிப்படியாக ஆராயலாம். இது “சம்பவத்தை மீண்டும் அனுபவிக்கச் செய்வது” என்பதல்ல. மாறாக, அந்த அனுபவத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, தற்போதைய வாழ்க்கையில் அதன் தாக்கத்தை குறைக்க உதவுவதே நோக்கமாகும்.
5. Negative Thoughts-ஐ ஆராய்தல்
- trauma-க்குப் பிறகு உருவாகும் எதிர்மறையான எண்ணங்களை புரிந்துகொள்ளும் ஒரு முக்கியமான பகுதியாகும். “இது நடந்ததற்கு நான் தான் காரணம்”, “யாரையும் நம்ப முடியாது”, “நான் எங்கும் பாதுகாப்பாக இல்லை” அல்லது “என்னால் எதையும் சமாளிக்க முடியாது” போன்ற எண்ணங்கள் உருவாகலாம். இத்தகைய எண்ணங்களை therapist உடன் பாதுகாப்பான சூழலில் ஆராய்ந்து, அவை எவ்வாறு உருவானது மற்றும் தற்போதைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவலாம்.
Trauma-Focused Therapy-யின் முக்கிய வகைகள்
Trauma-focused approach என்பது ஒரே ஒரு therapy அல்ல. பல evidence-based approaches இதில் அடங்குகின்றன.
1. Trauma-Focused Cognitive Behavioral Therapy (TF-CBT).
Trauma-Focused Cognitive Behavioral Therapy (TF-CBT) – Trauma-வை மையமாகக் கொண்ட அறிவுசார் நடத்தைச் சிகிச்சை என்பது குறிப்பாக trauma அனுபவித்த குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பயன்படுத்தப்படும் evidence-based therapy முறையாகும். Trauma காரணமாக ஏற்படும் பயம், கவலை, குற்ற உணர்வு, கோபம் மற்றும் தவிர்ப்பு போன்ற உணர்வுகளையும் நடத்தைகளையும் புரிந்துகொண்டு சமாளிக்க இது உதவுகிறது.
TF-CBT-யில் குழந்தையின் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப Psychoeducation, உணர்வுகளை அடையாளம் காணுதல், relaxation மற்றும் coping skills, cognitive skills, trauma narrative, gradual exposure போன்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்படலாம். பெற்றோர் அல்லது பராமரிப்பாளரும் சிகிச்சை செயல்முறையில் பொருத்தமான முறையில் ஈடுபடுத்தப்படலாம். இதன் நோக்கம் குழந்தை trauma அனுபவத்தை பாதுகாப்பான முறையில் புரிந்துகொண்டு, உணர்வுகளை சமாளிக்கும் திறனை வளர்த்து, அன்றாட வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையுடன் செயல்பட உதவுவதாகும்
2. EMDR
EMDR – Eye Movement Desensitization and Reprocessing – கண் அசைவு மூலம் உணர்விழப்பு மற்றும் மறுசெயலாக்கச் சிகிச்சை என்பது குறிப்பாக PTSD மற்றும் trauma தொடர்பான துன்பகரமான நினைவுகளை செயலாக்க உதவும் ஒரு structured psychological therapy முறையாகும். இதில் therapist-ன் வழிகாட்டுதலுடன், நபர் trauma நினைவுகளை நினைவுகூரும்போது, therapist வழங்கும் இருபக்கத் தூண்டுதல்கள் (bilateral stimulation), உதாரணமாக கண் அசைவு அல்லது பிற பொருத்தமான முறைகள், பயன்படுத்தப்படலாம்.
EMDR-ன் நோக்கம் trauma நினைவுகளை அழிப்பது அல்ல. அந்த நினைவுகளுடன் இணைந்த அதிகப்படியான பயம், துயரம், குற்ற உணர்வு போன்ற உணர்ச்சி மற்றும் உடல் எதிர்வினைகளை குறைத்து, அந்த அனுபவத்தை மிகவும் சமநிலையான முறையில் செயலாக்க உதவுவதாகும்
3. Cognitive Processing Therapy (CPT)
Cognitive Processing Therapy (CPT) – சிந்தனை செயலாக்கச் சிகிச்சை என்பது குறிப்பாக PTSD மற்றும் trauma-க்குப் பிறகு உருவாகும் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளை புரிந்துகொண்டு மாற்றுவதற்கு உதவும் ஒரு evidence-based psychological therapy முறையாகும். Trauma அனுபவத்திற்குப் பிறகு “இது எல்லாம் என் தவறு”, “நான் இனி யாரையும் நம்ப முடியாது”, “உலகம் முழுவதும் ஆபத்தானது” போன்ற எண்ணங்கள் உருவாகலாம். CPT-யில் therapist-ன் வழிகாட்டுதலுடன் இத்தகைய எண்ணங்களை ஆராய்ந்து, அவை உண்மைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை புரிந்துகொள்ள உதவப்படுகிறது. இதன் மூலம் பயம், குற்ற உணர்வு மற்றும் எதிர்மறையான சிந்தனைகளை சமாளித்து, ஆரோக்கியமான மற்றும் சமநிலையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
4. Prolonged Exposure Therapy
Prolonged Exposure Therapy (PE) – நீடித்த வெளிப்பாட்டு சிகிச்சை என்பது குறிப்பாக PTSD மற்றும் trauma தொடர்பான பயம், தவிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு psychological therapy முறையாகும். இதில், therapist-ன் வழிகாட்டுதலுடன், நபர் trauma நினைவுகள் அல்லது பயத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பான சூழ்நிலைகளை படிப்படியாக எதிர்கொள்ளக் கற்றுக்கொள்கிறார். இதன் மூலம் பயம் மற்றும் தவிர்ப்பு குறைந்து, அந்த அனுபவங்களை சமாளிக்கும் திறனையும் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடன் செயல்படும் திறனையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
குழந்தைகளுக்கான Trauma-Focused Therapy
குழந்தைகள் தங்களுடைய அனுபவங்களை பெரியவர்களைப் போல வார்த்தைகளால் விளக்க முடியாமல் இருக்கலாம்.
ஒரு குழந்தை:
- அமைதியாகிவிடலாம்
- அதிகமாக அழலாம்
- கோபமாக நடந்து கொள்ளலாம்
- பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருக்கலாம்
- தூக்கத்தில் மாற்றம் காணலாம்
- படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கலாம்
- மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாடலாம்
- பெற்றோரிடம் அதிகமாக ஒட்டிக்கொள்ளலாம்
என பல்வேறு வழிகளில் தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்தலாம். அதனால் குழந்தைகளுக்கான trauma support-ல் விளையாட்டு, வரைதல், கதை சொல்லுதல், வயதுக்கு ஏற்ற உரையாடல்கள் மற்றும் பாதுகாப்பான உறவு போன்றவை முக்கியமாக இருக்கலாம்.
பெற்றோரின் பங்கு
Trauma அனுபவித்த குழந்தைக்கு பெற்றோர் வழங்கும் ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.
- குழந்தையை நம்புங்கள் (குழந்தை தனது அனுபவத்தை பகிரும்போது உடனடியாக குற்றம் சாட்டாமல் கவனமாகக் கேட்பது முக்கியம்.)
- பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் (குழந்தை தற்போது பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்வது முதன்மையானது.)
- கட்டாயப்படுத்த வேண்டாம் (“எல்லாவற்றையும் இப்போது சொல்ல வேண்டும்” என்று குழந்தையை கட்டாயப்படுத்த வேண்டாம்.)
- உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் (“பயப்படாதே”, “அது ஒன்றுமில்லை” என்று கூறுவதற்குப் பதிலாக, “நீ அனுபவித்தது உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கலாம். நான் உன்னுடன் இருக்கிறேன்.” என்று ஆதரவு வழங்குவது உதவியாக இருக்கலாம்.
Trauma Therapy-யின் நோக்கம் Trauma-வை மறக்கச் செய்வதா?
இல்லை. Trauma-focused therapy-யின் நோக்கம் கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை அழித்துவிடுவது அல்ல. சில நினைவுகள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம். ஆனால் அந்த நினைவு: “என்னை கட்டுப்படுத்தும் ஒரு அனுபவம்” என்பதிலிருந்து “என் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவம்; அதை நினைத்தாலும் நான் தற்போதைய வாழ்க்கையைத் தொடர முடியும்” என்ற நிலைக்கு நகர உதவுவதே சிகிச்சையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்.
அனைவருக்கும் Trauma-Focused Therapy தேவையா?
அவசியமில்லை. ஒரு கடினமான நிகழ்வை அனுபவித்த அனைவருக்கும் PTSD அல்லது வேறு மனநலக் கோளாறு ஏற்படும் என்று கூற முடியாது. சிலர் குடும்பம், நண்பர்கள், சமூக ஆதரவு மற்றும் தங்களுடைய இயல்பான coping முறைகளின் மூலம் படிப்படியாக மீண்டு வரலாம். ஆனால் அறிகுறிகள் நீடித்தால், தீவிரமாக இருந்தால் அல்லது அன்றாட வாழ்க்கையை பாதித்தால் தகுதியான mental-health professional-ஐ அணுகுவது பயனுள்ளதாக இருக்கலாம்.
Trauma Therapy-யில் முக்கியமான கொள்கைகள்
எப்போது தொழில்முறை உதவியை நாட வேண்டும்?
பின்வரும் மாற்றங்கள் நீடித்து வாழ்க்கையை பாதித்தால் தொழில்முறை உதவியை நாடுவது பொருத்தமானதாக இருக்கலாம்:
- தொடர்ந்து பயம் அல்லது பதற்றம்
- அடிக்கடி Trauma நினைவுகள்
- தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகள்
- தூக்கத்தில் கடுமையான மாற்றம்
- பள்ளி அல்லது வேலை செயல்பாட்டில் பாதிப்பு
- சமூக உறவுகளைத் தவிர்த்தல்
- அதிகமான கோபம் அல்லது எரிச்சல்
- சம்பவத்தை நினைவுபடுத்தும் விஷயங்களை அதிகமாகத் தவிர்த்தல்
- தொடர்ந்து குற்ற உணர்வு அல்லது அவமான உணர்வு
- அன்றாட வாழ்க்கையை நிர்வகிக்க முடியாத நிலை
தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அல்லது உடனடி ஆபத்து இருந்தால், உடனடியாக உள்ளூர் அவசர உதவி அல்லது தகுதியான mental-health professional-ஐ அணுக வேண்டும்.
Trauma-Informed Approach என்றால் என்ன?
Trauma-Informed Care மற்றும் Trauma-Focused Therapy இரண்டும் ஒரே பொருள் அல்ல. Trauma-Focused Therapy என்பது Trauma-வின் தாக்கத்தை நேரடியாக சிகிச்சையின் ஒரு பகுதியாகக் கொண்டு செயல்படும் குறிப்பிட்ட therapeutic approaches-ஐ குறிக்கிறது.
Trauma-Informed Approach என்பது ஒரு நபரின் கடந்தகால Trauma அனுபவங்கள் அவருடைய நடத்தை மற்றும் தேவைகளை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான மற்றும் மரியாதையான முறையில் சேவைகளை வழங்கும் ஒரு பரந்த அணுகுமுறையாகும்.
உதாரணமாக, ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தையின் “மோசமான நடத்தை” என்று மட்டும் பார்க்காமல், அந்த குழந்தை ஏதேனும் கடினமான அனுபவத்தை சந்தித்திருக்கிறதா என்பதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான ஆதரவை வழங்குவது Trauma-informed approach-ன் ஒரு உதாரணமாக இருக்கலாம்.
Trauma-விலிருந்து மீள்வது எப்படி?
மீட்பு என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான பயணம் அல்ல.ஒருவருக்கு சில வாரங்கள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு நீண்டகால ஆதரவு தேவைப்படலாம். மீட்பை ஆதரிக்கக்கூடிய சில அம்சங்கள்:
- பாதுகாப்பான உறவுகள்
- குடும்ப ஆதரவு
- நண்பர்களின் ஆதரவு
- போதுமான தூக்கம்
- ஒழுங்கான உணவு
- உடல் இயக்கம்
- தினசரி ஒழுங்கு
- ஆரோக்கியமான coping strategies
- உணர்வுகளை வெளிப்படுத்தும் பாதுகாப்பான வழிகள்
- தேவையானபோது தொழில்முறை உளவியல் உதவி
முக்கியமாக, மீண்டு வருவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை.
Trauma-Focused Therapy (Trauma மையப்படுத்திய சிகிச்சை) என்பது traumatic experiences-ன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு, நபர் பாதுகாப்பான முறையில் தனது உணர்வுகள் மற்றும் நினைவுகளை கையாளவும், ஆரோக்கியமான coping skills-ஐ வளர்த்துக்கொள்ளவும், தற்போதைய வாழ்க்கையை மீண்டும் முன்னெடுக்கவும் உதவும் உளவியல் சிகிச்சை அணுகுமுறைகளின் தொகுப்பாகும்.

0 Comments